If you are not able to read tamil, Click here
தமிழில் மருத்துவ இலக்கியங்கள்
அணிந்துரை
கருத்துரை
என்னுரை
பதிப்புரை
இயல்
 
தமிழ் மருத்துவ இலக்கியங்கள்
தமிழ் மருத்துவத்தின் வரலாறு
தமிழில் மருத்துவ நூல்கள்
தமிழ் மருத்துவம்
சித்தர் நெறி
தமிழ் மருத்துவ நூல்களின் இலக்கியக் கூறுகள்
முடிவுரை
பின்னிணைப்புகள்
 
மருத்துவப் பூக்கள்
சித்த மருத்துவம் – ஆயுர் வேதம் ஒப்பீடு
வேத நூல்களில் தாவரங்கள்
தமிழ் மருத்துவம்
வர்ம நூல்கள்
பஞ்சபூதத்தின் பரிமாணங்கள்
சித்தர் சமாதி
கோயில் தாவரங்கள்
அகத்தியர் குழம்பு
கற்பங்கள்
நரம்பு முறிவினால் உண்டாகும் பக்க விளைவுகள்
படுவர்மங்களும் இளக்கும் காலமும்
நோயுற்ற நாள் பலன்
நோயுற்ற நாள் – நோயின் தன்மை
அமுத நிலை
சித்தர் சாதி, மரபு
சித்தர் குடும்பம்
அறுபத்து நான்கு சித்துகள்
ஐந்தெழுத்தும் உடல் சக்கரமும்
தமிழ் மருத்துவச் சுவடிகள்
பதிப்பு நூல்கள்
துணை நூற்பட்டியல்
அணிந்துரை
1) டாக்டர் கோ. கிருட்டிணமூர்த்தி
2) பேராசிரியர் புது. ஜெயப்பிரகாஷ் நாராயணன் B.I.M., M.D. (Siddha)
பேராசிரியர் புது. ஜெயப்பிரகாஷ் நாராயணன் B.I.M., M.D. (Siddha)
பேராசிரியர் புது. ஜெயப்பிரகாஷ் நாராயணன் B.I.M., M.D. (Siddha)
Former Professor & Vice - Principal: Govt.
Siddha Medical College, Chennai
Member : Siddha Pharmacopoeia Committee, Govt. of India, New Delhi
Former Member: Governing Body - Central Council for Research in Ayurveda & Siddha Former Member: Ayurveda, Siddha, Unani Drugs Technical Advisory Board - Govt. of India
Former Secretary : IMPCOPS
  Residence & Clinic:
Old No. 55, New No. 70,
Panchali Amman Kovil Street,
Arumbakkam, Chennai - 600 106
Phone: 2475 8631 Cell: 98410 12532
E-Mail: Jpnsiddha @hotmail.com
On Tuesday & Friday:
2/322, Mondiamman Koil Street,
Redhills, Chennai - 600 052.
Time : 6.00 to 8.00 p.m.
 

தமிழகத்தின் தனிப்பெரும் சொத்து

முனைவர் திரு. இர. வாசுதேவன் அவர்களுடைய ஆய்வுப் படைப்பாகிய ""தமிழில் மருத்துவ இலக்கியங்கள் – ஓர் ஆய்வு'' சித்த மருத்துவத்தின் தனிப்பெரும் சொத்தாக அமைந்திருக்கிறது.

தமிழ் மருத்துவ வரலாறு, தமிழ் மருத்துவ மரபு, பயன்பாடு, இலக்கியங்கள் எனப் பன்முக ஆய்வாக இந்த ஆய்வினை நிடத்தியிருக்கிறார் திரு. இர. வாசுதேவன்.

ஏதோ ஓர் ஆய்வுக் கட்டுரை அளித்து முனைவர் பட்டம் பெற்றால் போதும் என எண்ணுவோர் உண்டு. ஆனால் இளம் வயதிலிருந்தே தமிழ், தமிழ் என்று ஆன்மாவின் ஆழத்திலிருந்து ஊற்றெடுத்த தமிழ் உணர்வினை ஒவ்வொரு வரியிலும் காணுகின்றேன். அந்த உணர்வின் காரணமாக இதுபோன்று இதற்கு முன்னர் இந்திய மருத்துவத்தையும் தமிழ்மருத்துவத்தையும் பற்றி எழுதிய ஆர்.எஸ். அகர்வால், பி. குடும்பையா, பி.ஜெயா, நீ. கந்தசாமிப் பிள்ளை, க. வெங்கடேசன், வே. இரா. மாதவன் ஆகியோரின் தொண்டினை நனைவுகூர்கின்றார் ஆசிரியர்.

""மெல்லத் தமிழ் இனிச்சாகும் – அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை ஓங்கும்''

எனத் தமிழ்த் தாயே வாடுவதாகப் பாரதிப் புலவர் வருந்துவார். அத்தகைய வாட்டம்போக்கவந்த வரப்பிரசாதமாக முனைவர் வாசுதேவனின் நூல் அமைந்திருக்கிறது.

தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்படும் என்ற செய்தி நிம்மை மகிழ்விக்கின்றது. அத்தகைய சீரிய எண்ணம் கொண்டோர் அதைச் செயல்படுத்துகின்றபோது, தமிழின் அறிவியல் புலத்தின் ஆழம் என்ன என அறிய முனைகின்றவர்களுக்கு ஓர் ஆதார நூலை இங்கே படைத்தளித்திருக்கின்றார் முனைவர் வாசுதேவன்.

எத்தனை காலமாகத் தேக்கி வைக்கப்பட்ட உணர்வுகள், சிந்தனைகள், தெளிவாகத் "" தமிழில் மருத்துவ இலக்கியங்கள் ஓர் ஆய்வு'' நூலாக ஊற்றெடுத்திருக்கின்றது என்பதை நான் எண்ணி எண்ணி மகிழ்கின்ற போது என் மனதுக்குள்ளே மகிழ்ச்சியினால் மழை பெய்கின்றது.

சித்த மருத்துவ வரலாற்றினை இலக்கிய அடிப்படைகளோடு விளக்கப் புகுந்த நூல்களில் தலையாயது ""தமிழில் மருத்துவ இலக்கியங்கள் ஓர் ஆய்வு'' என்பதே எனது துணிபு.

இரசம், தாளகம், கந்தகம் போன்ற இரசாயனச் சரக்குகளைச் சங்க காலத்துக்கு முன்பிருந்தே தமிழ் அறிவர்கள் மருந்தாகப் பயன்படுத்தி வந்தார்கள் என்பதற்குப் புறநானூறு போன்ற இலக்கியங்களிலிருந்து சான்றுகளைத் திரட்டித் தந்திருப்பது ஆசிரியரின் நுண்மாண் நுழைபுலத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு. பாடகர்களுக்கு ""பஞ்சமரபு'' கூறும் மருந்தினை எடுத்துக் காட்டுவதும், பூம்புகார் பொற்கொடி மாதவி எத்தகைய ஒப்பனைப் பொருட்களைப் பயன்படுத்தினார் என்பதற்கான சான்றுகளும் இத்தகையதே.

சித்தர் பாடல்கள் திருந்திய தமிழில் இல்லை எனச் சிலர் வாதிப்பதுண்டு. அவர்களுக்குக் கூட, சித்தர் பாடல்களின் இலக்கியக் கூறுகளை ஆசிரியர் எடுத்துக் காட்டியிருப்பது பாராட்டத்தக்கது.

கற்கண்டின் எந்தப் பகுதியைக் கடித்துப் பார்த்தாலும் அது இனிக்கத்தான் செய்யும். முனைவர் வாசுதேவனின் இந்தப் படைப்பும் அத்தகையதே.

மார்க்ஸ் முல்லர் போன்ற மேலைநாட்டு அறிஞர்கள் இந்த நாட்டின் தத்துவ நலைகளை ஆராயப் புகுந்தபோது ""யாதும் ஊரே யாவரும் கேளீர்'' என்ற சிந்தனையைப் பறைசாற்றுகின்ற புறநானூறு போன்ற இலக்கியங்கள் அவர்முன் காட்டப்படவில்லை. ஏன் அந்த நிலை? நம்முடைய நூற்கள் எதுவுமே அக்காலக்கட்டத்தில் ஆங்கில விளக்கங்களோடு வெளிவரவில்லை. அப்படி வந்திருந்தால் மார்க்ஸ் முல்லர் தமிழைத்தான் உயர்தனிச் செம்மொழியாக அறிவித் திருப்பார். இப்போது சித்த மருத்துவமும் அத்தகைய விளக்க நூற்கள் இல்லாத அவல நிலையில் உள்ளது.

தமிழக அரசோ அல்லது வேறு பதிப்பகங்களோ ""தமிழில் மருத்துவ இலக்கியங்கள்'' நூலை ஆங்கிலப் பதிப்பாகவும் கொண்டு வர முன்வந்தால் அவர்களைத் தமிழுலகம் என்றும் பாராட்டும் என்பதே என் கருத்து.

மொத்தத்தில் முனைவர் வாசுதேவனின் ""தமிழில் மருத்துவ இலக்கியங்கள்'' சித்த மருத்துவ உலகிற்கு மட்டுமல்ல, தமிழுலகத் திற்கே கிடைத்த தனிப்பெரும் சொத்து. ""தொண்டு செய்வாய் தமிழுக்குத் துறைதோறும் துறைதோறும்'' என்ற பாவேந்தரின் உள்ளக் கிடக்கை வாசுதேவனின் நூலில் வரிக்கு வரி முழக்கமிடுகின்றது. சித்த மருத்துவ உலகின் சார்பாக நன்றி கலந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

""வாழிய செந்தமிழ்! வாழ்க – நற்றமிழர்
வாழிய பாரத மணித்திருநாடு!!

பேராசிரியர். புது. ஜெயப்பிரகாஷ் நாராயணன்

 
முதல் பக்கம் | என்னைப் பற்றி | நூல்கள் | கவிதைகள் | கட்டுரைகள் | குறிப்புகள் | பதிவிறக்கங்கள் | இணைப்புகள்
தொடர்பு கொள்ள
| பக்கங்கள் | தமிழில் மருத்துவ இலக்கியங்கள
Copyrights 2008 & Beyond - Thamizhkkuil.net. Powered by 4CreativeWeb Solutions